ரகசியமாக 3வது திருமணத்தை முடித்த கேத் வின்ஸ்லெட்... புது கணவருடன் விண்வெளியில் பறக்கிறார்!

|

Kate Winslet Weds Third Husband Ned Rocknroll

லண்டன்: டைட்டானிக் நாயகி கேத் வின்ஸ்லெட் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

37 வயதாகும் பிரிட்டிஷ் நடிகையான கேத் வின்ஸ்லெட் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

முதல் கணவர் இயக்குனர் ஜிம் தெரபில்டன் இவரை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 12 வயதில் பெண் குழந்தை உள்ளது.இரண்டாவதாக ஷேம் மெண்டீஸ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 9 வயதில் ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தன்னை விட இளையவரான 34 வயதாகும் நெட் ராகென்ரோல் என்பவரை காதலித்து வந்தார். இவர் விண் வெளி ஆய்வு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

அவரைத்தான் இப்போது 3-வதாக திருமணம் செய்து கொண்டார் கேத் வின்ஸ்லெட். இவர்களது திருமணம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் முன்பே நடந்துவிட்டது. ஆனால் கொஞ்சநாள் இதை ரகசியமாக வைத்திருந்த வின்ஸ்லெட் - நெட் ராகென்ரோல் ஜோடி நேற்றுதான் உலகுக்கு வெளிப்படுத்தினர்.

ராக்கென்ரோலின் உறவினர்தான் பிரபல பிஸினஸ்மேன் சர் ரிச்சர்டு பிரான்ஸ்மேன். வர்ஜின் குழும தலைவர். 400 நிறுவனங்களுக்கு அதிபர்.

கேத் வின்ஸ்லெட் - ராக்கென் ரோல் திருமணப் பரிசாக இருவரையும் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப் போகிறாராம் பிரான்ஸ்மேன்.

 

Post a Comment