படத்தயாரிப்பாளர் ஆகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்

|

G V Prakash Kumar Turn Producer

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது படத்தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளம் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் வெற்றிகரமான பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். இவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி மகனும் ஆவர். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷன்ஸ்' என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் படம் தயாரிக்க இருக்கிறார்.

பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த விக்ரம் சுகுமார் இயக்கும் படத்தை முதன் முதலில் தயாரிக்கிறார். ‘ஆடுகளம்‘ படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்து வசனம் எழுதியுள்ளார் விக்ரம் சுகுமார். அவர் கூறிய கதை பிடித்துப் போகவே தானே தயாரிக்க களம் இறங்கிவிட்டார் பிரகாஷ்குமார்.

படத்தயாரிப்பு பற்றி கூறிய பிரகாஷ்குமார், ‘‘படம் தயாரிக்க வேண்டும் என்பது என் ஆசை. அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேறும் என நினைக்கவில்லை. இந்த கதையை கேட்டதும் நானே தயாரிக்க முடிவு செய்தேன். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு எனது அசிஸ்டென்ட் ஒருவர் இசை அமைக்கிறார்'' என்றார்.

இசை அமைப்பாளர்கள் ஹீரோவாக அவதாரம் எடுத்துவரும் நிலையில் பிரகாஷ்குமார் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment