சென்னை: தனது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசையை ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவியை வெளியிட வைக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இந்த விழாவுக்கு வர ரஜினியும், கமலும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜா தனது மகன் மனோஜ், கார்த்திகா, இனியா உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்திற்கு ஜி.வி, பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்த முடிவு செய்துள்ளார் பாரதிராஜா. யாரை வைத்து இசையை வெளியிடலாம் என்று யோசித்தவருக்கு தன்னுடைய 16 வயதினிலே படத்தில் நடித்த முக்கியமான 3 பேரின் நினைவு வந்தது. அந்த 3 பேர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த், கமல் ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி தான்.
உடனே இது குறித்து ரஜினி, கமலிடம் தெரிவிக்கவே அவர்களும் சந்தோஷமாக ஓ.கே. சொல்லிவிட்டனர். ஸ்ரீதேவி என்ன சொன்னார் என்று தெரியவில்லை. இருப்பினும் ரஜினி, கமல் வரும் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் அவர்.
ஸ்ரீதேவி ரஜினி மற்றும் கமலுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment