சென்னை: சூர்யாவுடன் நடித்த மௌனம் பேசியதே படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போடவிருந்தாராம் த்ரிஷா.
மாடலிங் துறையில் கால் பதித்து அதன் பிறகு நடிக்க வந்தவர் த்ரிஷா என்பது அனைவரும் அறிந்ததே. மிஸ் சென்னை பட்டம் வென்ற த்ரிஷாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவரது அம்மா உமாவோ சினிமா உலகம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது அதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
3 படங்களில் மட்டும் நடிக்கிறேன், ஒத்து வரவில்லை என்றால் சினிமாவில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு தான் த்ரிஷா நடிக்க வந்துள்ளார். அவரது போதாத நேரம் லேசா, லேசா மற்றும் மௌனம் பேசியதே ஆகிய 2 படங்களும் சரியாக ஓடவில்லை. சரி நமக்கெல்லாம் சினிமா ஒத்துவராது என்று விலக இருந்த நேரத்தில் சாமி பட வாய்ப்பு கிடைத்தது.
அந்த படம் ஹிட்டாகவே த்ரிஷா சினிமாவில் தங்கிவிட்டார். பிறகு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட உலகிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
Post a Comment