வனத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் நடந்து கொண்டதற்காக இயக்குநர் மணிவண்ணன், சத்யராஜூக்கு கேரளா வனத்துறை அதிகாரிகள் விருந்து கொடுத்து பாராட்டியுள்ளனர்.
நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ, படப்பிடிப்பு கேரளாவின் டோனி காட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன. மணிவண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சத்தியராஜ், சீமான், வர்ஷா, கோமல்ஷர்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு நடைபெறும் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆங்காங்கே அட்டைப் பெட்டியை வைத்து அதில் குப்பைகளை போடுமாறு மணிவண்ணன் அறிவுறுத்தினாராம். இதனையடுத்து காடுகளில் பிளாஸ்டிக் குப்பைகள் விழாமல் தடுக்கப்பட்டது.
அப்போது அங்கு முகாமிட வந்த கேரளா வனத்துறை அதிகாரிகள் இயக்குநர் மணிவண்ணனை வெகுவாக பாராட்டியுள்ளனர். அதோடு நிற்காமல் மணிவண்ணன், சத்தியராஜ் உள்ளிட்ட முழு படப்பிடிப்புக் குழுவினரையும் மாலை நேரத்தில் தங்களின் முகாமிற்கு அழைத்து விருந்து கொடுத்து கவுரவப்படுத்தினார்களாம்.
Post a Comment