என்னை வைத்து ஒரு படம் நீ இயக்கு, உன்னை வைத்து அடுத்த படத்தை நான் இயக்குகிறேன் என்ற ஒப்பந்த அடிப்படையில் படம் பண்ணிக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் சசிகுமாரும் சமுத்திரக்கனியும் மீண்டும் இணைகின்றனர்.
சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி எனத் தொடர்ந்த இவர்கள் திரைப் பயணத்தில் திடீரென்று பிரேக் விழுந்துவிட்டதாகவும், இருவரும் இனி சேர்ந்து படம் பண்ண மாட்டார்கள் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.
சசிகுமார் இப்போது குட்டிப்புலி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி நிமிர்ந்து நில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இருவருமே இயக்குநர்களாக மட்டுமின்றி, நடிகர்களாகவும் ஜெயித்திருக்கிறார்கள். எனவே இருவரும் இணையும் படம் வர்த்தக ரீதியான எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த முறை சமுத்திரக்கனி இயக்க சசிகுமார் ஹீரோவாக நடிப்பார் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை சசிகுமாரே தயாரிக்கிறார்.
+ comments + 1 comments
Iruvarum Tamilagaththil Miga Sirantha Nadigargal Aavargal Vaalga Thiru.Sumuththira Kani Thiru.Sasikumaar Avargal..
Post a Comment