சென்னையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி சந்திப்பு - உரிய சூழல் அமையும் வரை காத்திருக்க அறிவுரை!

|

சென்னை: தனது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக நடத்திய சென்னை மாவட்ட தலைமை மன்ற நிர்வாகிகளை திங்கள் கிழமை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அனைவருடனும் பேசிய ரஜினி விழாவுக்காக உழைத்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

ரசிகர்கள் அனைவரும் தங்கள் பணிகளில் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்றும், குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

rajini meets his fan club office bearers
ரஜினியின் சமீபத்தில் அரசியல் பேச்சுகளைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வருவது உறுதிதானா... என்று நிர்வாகிகள் கேட்டதற்கு, "சரியான சூழல் அமைந்தால்தான் அது சாத்தியம்" என்றார்.

ரசிகர்கள் அழைக்கிறார்கள் என்பதற்காக அரசியலுக்கு வந்து கையைச் சுட்டுக் கொண்ட சிரஞ்சீவி, விஜயகாந்த் உள்ளிட்டோரை சுட்டிக் காட்டிய ரஜினி, நாம் அரசியலில் அடியெடுத்து வைப்பது ஏதோ ஒப்புக்காக இருக்கக் கூடாது. வந்தால் அதிகாரத்தை கையிலெடுத்து மக்களுக்கு நினைத்ததைச் செய்யும் அளவுக்கு சூழல் அமைய வேண்டும். அதற்கு முன் அவசரப்படக் கூடாது என்றார்.

அரசியலில் கடைவிரித்தேன் கொள்வாரில்லை... என்ற நிலை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினி கூறியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

 

Post a Comment