உதயநிதி - நயன்தாரா படத்தின் தலைப்பு 'கதிர்வேலின் காதலி'!

|

Udhayanidhi Nayanthara Movie Title

சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு கதிர்வேலின் காதலி என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா. சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

உதயநிதியின் பேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

உதயநிதிக்கு கிட்டத்தட்ட இணையான வேடங்களில் பரோட்டா சூரியும் சந்தானமும் நடிக்கிறார்கள். அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி தயாரிக்கும் படம் இது.

 

Post a Comment