பெங்களூர்: தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் பிரியாமணி கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போன்று ஓவியாவும் சாண்டல்வுட்டில் ஒரு ரவுண்ட் வர முயற்சி செய்கிறார்.
பிரியாமணிக்கு நடிக்கத் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாது. பருத்தி வீரன் படத்தில் பட்டைய கிளப்பியிருப்பார். ஆனால் என்னமோ தெரியவில்லை அவரை கோலிவுட் படங்களில் எடுப்பார் இல்லை. அவரும் நான் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பிட்டெல்லாம் போட்டுப்பார்த்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து அவர் தற்போது சாண்டல்வுட் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சிவராஜ் குமார் ஜோடியாக லக்ஷ்மி என்ற படத்தில் நடிக்கிறார்.
பிரியாமணி போன்று ஓவியாவுக்கும் தமிழில் வாய்ப்புகள் இல்லை. அவரும் நமக்கு ஒரு பெரிய பிரேக் கிடைக்கும் கோலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிடலாம் என்று முட்டி மோதிப் பார்த்தும் ம்ம்ம் முடியவில்லை. இந்நிலையில் தான் அவர் நடித்த களவாணி படத்தின் கன்னட ரீமேக்கான கிராதகா நன்றாக ஓடியது. கன்னடத்தில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதே அங்கேயே கொஞ்ச காலம் செட்டில் ஆனால் என்ன என்று நினைக்கிறார்.
வாய்ப்புகள் கிடைத்தால் அம்மணி பெங்களூரில் செட்டிலாகிவிடுவார் போல.
Post a Comment