வாணி ராணி... ராதிகாவுக்கு ஜோடி வேணு அர்விந்த், பப்லு!

|

Radika S New Serial Vaani Raani

வாணி ராணி மெகா தொடரில் ராதிகாவுக்கு ஜோடியானார் சின்னத் திரை நடிகர் பப்லு.

ராதிகா சரத்குமார் தனது ராடான் மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய மெகா தொடர் வாணி ராணி.

திறமையான வக்கீல் வாணி, அப்பாவி தங்கை ராணி என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ராதிகா.

வாணியும் ராணியும் பூமிநாதன், சாமிநாதன் என இரட்டையர்களுக்கு வாழ்க்கைப்படுகிறார்கள். இவர்களில் வாணி மிகவும் புத்திசாலி, நன்கு படித்தவள், ராணியோ படிக்காதவள் என்றாலும் குடும்பத்தை நிர்வகிப்பதில் படு கெட்டிக்காரி.

ஒற்றுமையாக இருக்கும் இந்த கூட்டுக்குடும்பம் ஒரு நாள் உடைகிறது. ஏன் இந்த விரிசல், எப்படி ஒற்றுமையானார்கள்? என்பதுதான் வாணி ராணியின் கதைச் சுருக்கம்.

ராதிகாவுக்கு ஜோடியாக வேணு அர்விந்த், பப்லு நடிக்கின்றனர். ரவிகுமார், புவனா, அருண் என ராதிகாவின் வழக்கமான ஆர்டிஸ்ட்களும் உண்டு.

ஓ என் ரத்னம் இயக்குகிறார். தொடரின் கிரியேட்டிவ் ஹெட்டாக ராதிகா பணியாற்றுகிறார். சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

 

Post a Comment