மும்பை: குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு நடிக்காமலிருந்த ஐஸ்வர்யா ராய், மீண்டும் நடிக்க முடிவு செய்து கதை கேட்க ஆரம்பித்துள்ளார்.
குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. மகள் ஆரத்யாவை கவனிப்பதில் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார் ஐஸ்வர்யா.
இப்போது மீண்டும் நடிக்கும் ஆர்வத்துடன் கதை கேட்கத் துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. அவருக்கு கதை சொல்ல நான் நீ என நிறைய இயக்குநர்கள் வருகிறார்களாம்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், "குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும். கவனம் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் நான் நடிக்காமல் இருந்தேன்.
குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
சில இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பது உண்மைதான். ஆனாலும் உடனடியாக நடிக்க முடியாது. இப்போது கதை கேட்டாலும் சில மாதங்கள் கழித்துதான் நடிப்பேன்.
என்னால் வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடிக்க முடியும். ஒன்றரை வருடங்கள்தானே ஆகிறது," என்றார்.
சமீபத்தில் பள்ளிக்கூட நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேடையில் தனது கஜ்ராரே பாடலுக்கு ஆடினார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பெற்ற பிறகு அவர் தோன்றிய முதல் மேடை நிகழ்ச்சி இதுதான்.
Post a Comment