அடுத்தடுத்த காட்சிகளிலும் இந்த அடி உதை தொடர, ஈனஸ்வரத்தில் பின்னணி இசை.
இதெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, ஊடகங்களுக்கும் தரப்பட்டுள்ளது.
என்ன இதெல்லாம்..?
பரதேசியில் எல்லாமே எப்படி நிஜமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட Reality Teaser- யாம்!
பரதேசி ஷூட்டிங்கின்போது பாலா யாரையுமே திட்டவில்லை.. அடிக்கவில்லை என்றெல்லாம் அதன் ஹீரோ, ஹீரோயின்கள் தொலைக்காட்சிகளில் பேட்டிகளாய் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கு வீடியோவிலோ அதற்கு நேர் மாறாக, டெரரான காட்சிகளை தந்து, ஒளிபரப்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
என்னதான் நடிப்பு, ஷூட்டிங், சும்மனாங்காட்டியும் என்று சொன்னாலும், இந்தக் காட்சிகளைப் பார்க்கும் யாரும் நிச்சயம் பாலா ஒரு வார்த்தையாவது திட்டாமல் போக மாட்டார்கள்!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரிட்டிஷ்காரர்களிடம் பட்ட கொடுமையை அப்படியே ஷூட்டிங்கில் நடிகர் - நடிகைகளுக்கு டெமோ காட்டியிருக்கிறார் பாலா!!
Post a Comment