தலைவா என்ற தலைப்பை விஜய் அண்ட் விஜய் தங்கள் படத்துக்கு சூட்டும்போதே, 'இந்தப் படத்துக்கும் தடை கேட்டு வழக்கு வருவது நிச்சயம்' என்று நாம் குறிப்பிட்டிருந்தோம். கிட்டத்தட்ட அது நடந்துவிடும் போலிருக்கிறது!
ஆம்.. இந்தப் படத்துக்கு தலைவா என்ற தலைப்பைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரத் தயாராகிறார் தலைவன் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் பாஸ்கரன் (ஜெஜெடிவி).
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனது தலைவன் படத்தை ஆரம்பித்துவிட்டார் பாஸ்கரன். அது பத்திரிகைச் செய்தியாகவும் வந்துவிட்டது. இரண்டு விஜய்களுக்குமே அது நன்றாகத் தெரியும்.
இருந்தாலும் தலைவா என்று தலைப்பு வைத்துவிட்டனர். ஏற்கெனவே, இயக்குநர் ஏஎல் விஜய் படங்களும், நடிகர் விஜய் படங்களும் தலைப்பு விஷயத்தில் நீதிமன்றப் படி ஏறுவது வழக்கமாகிவிட்டன.
விஜய்யின் காவலன், துப்பாக்கி போன்ற படங்களுக்கு நடந்த தலைப்பு தகராறு ரொம்ப பிரசித்தம். குறிப்பாக துப்பாக்கி Vs கள்ளத் துப்பாக்கி கன்னித்தீவு கதை மாதிரி தொடர்ந்து, கடைசியில் காம்ப்ரமைசில் முடிந்தது.
அதேபோல, ஏஎல் விஜய் இயக்கிய தெய்வத் திருமகன், தாண்டவம் படங்களுக்கும் தலைப்பு சண்டை நடந்தது நினைவிருக்கலாம்.
இப்போது தலைவா Vs தலைவன் சண்டை தொடங்கப் போகிறது. கோர்ட்டில் இது எத்தனை வாய்தா வாங்கப் போகிறதோ!
Post a Comment