சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி வீட்டில் திருடிய மூன்று கொள்ளையர்களை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தி.நகர் வடக்கு போக்ரோட்டில் உள்ளது ஆர்.பி.சவுத்திரி வீடு. கடந்த 29-ந் தேதி இவரது வீட்டில் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்தனர்.
வீட்டில் இருந்த ஐபேட் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை அவர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் ஆர்பி சவுத்ரி புகார் செய்தார்.
உதவி கமிஷனர் சிவ பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை வலை வீசி தேடி வந்தனர் போலீசார்.
இந்த கொள்ளை தொடர்பாக தி.நகர் எம்.கே. ராதா நகரைச் சேர்ந்த முருகன் (19), தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரைச் சேர்ந்த ராஜா (19), ஆயிரம் விளக்கு ஆழகிரி நகரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகப்படும் வகையில் திரிந்த அவர்களை ரோந்து போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில் ஆர்.பி.சவுத்திரி வீட்டில் கொள்ளையடித்தது தாங்கள்தான் என தெரிய வந்தது. உருட்டு கட்டையால் கிரில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையடித்ததாக அவர்கள் கூறினார்கள்.
கொள்ளையடித்த பொருள்களை விற்றுவிட்டதாகக் கூறியுள்ளனர். அந்தப் பொருள்களை மீட்கும் முயற்சியில் உள்ளனர் போலீசார்.
Post a Comment