வை ராஜா வை நாயகியாக ப்ரியா ஆனந்த்

|

Priya Anand Is Aishwarya Dhanush Heroine   

ஐஸ்வர்யா தனுஷின் புதிய படமான வை ராஜா வை-யில் நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கடல் ஹீரோ கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடந்து வந்தது. எதிர் நீச்சல் படத்தில் ப்ரியா ஆனந்தின் நடிப்பு மற்றும் அந்தப் படம் அடைந்துள்ள வெற்றி காரணமாக, வை ராஜா வை படத்திலும் அவரையே நாயகியாக்க முடிவு செய்தார் ஐஸ்வர்யா.

கடந்த ஆண்டு வரை ராசியில்லாத நாயகி பட்டியலில் இருந்தவர் ப்ரியா ஆனந்த். பக்கா தமிழ்ப் பெண்ணான இவர் கைவசம் இப்போது எக்கச்சக்க படங்கள்.

சிவாவுடன் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படம், கலைப்புலி தாணு தயாரிக்கும் படம் என எல்லாமே பெரிய படங்களைக் கையில் வைத்திருக்கிறார்.

 

Post a Comment