பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள நான்தான்டா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
சமூகத்தின் ஒழுங்கு குறைந்து குற்றங்கள் அதிகரிக்கக் காரணம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்தான். இந்த விஷச் சூழல் வெவ்வேறு ரூபங்களில் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.
இன்றைய சமுதாயத்தின் பிரதிநிதியான நாயகன் 'நான்தான்டா' என்று தன்னை முன்னிலைப்படுத்துவதையே தலைப்பாக்கிவிட்டார்களாம்.
இந்தப் படம் சில ஆண்டுகளுக்கு முன் வர்மா இயக்கி வெளிவந்த சத்யா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் சக்ரவர்த்தி நடித்திருந்தார். இந்த இரண்டாம் பாகத்தில் சர்வானந்த் நடிக்கிறார்.
வர்மாவின் மாஸ்டர் பீஸ் என்று வர்ணிக்கப்படும் படம் இந்த சத்யா. இரண்டாம் பாகத்தை இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் எடுக்கிறார்.
தமிழ், தெலுங்கில் நடிப்பது சர்வானந்த். இந்தியில் படத்தின் பெயர் சத்யா 2. தமிழில், நான்தான்டா... என்று வைத்திருக்கிறார்.
இதற்கு முன் தான் இயக்கிய சிவா படத்தை தமிழில் உதயம் என வெளியிட்டு பெரும் வெற்றி பெற்றார். ஆனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்த போது வர்மா சறுக்கியது நினைவிருக்கலாம்.
Post a Comment