கேன்ஸ்: பிரான்சில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ரூ 5.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை துப்பாக்கி சூடு, கொள்ளை என எதிர்மறையான விஷயங்கள் கேன்ஸ் பட விழாவில் அரங்கேறியுள்ளன.
ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு விருது பெறும் நடிகைகள் அணிவதற்காக ஒரு தனியார் நிறவனம் தங்க நகைகளை இரவல் ஆக வழங்கி இருந்தது. அந்த நகைகள் விழா நடந்த ஓட்டலின் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில், அங்கு வைத்திருந்த தங்க நகைகள் முழுவதும் கொள்ளை போய்விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ. 5.5 கோடி.
ஆனால் விழாவில் வழங்கப்படும் பால்ம் 'டி' மோர் கோப்பை மட்டும் பாதுகாப்பாக இருந்தது. அதை கொள்ளையர்கள் எடுத்துச் செல்லவில்லை.
கடந்த ஆண்டு நடந்த "கேன்ஸ்" பட விழாவில் கால்பந்து வீரர்களின் ரூ.3 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரங்கள் கொள்ளையடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
கேன்ஸ் விழாவில் இன்று துப்பாக்கி சூடு நடந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்த கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
Post a Comment