சினிமாவில் ரொமான்ஸ் நாயகன் என்று பெயரெடுத்த தனுஷ் தனக்கு வீட்டில் ரொமான்ஸ் செய்ய வராது என்றும் என் மனைவி அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார் என்று கூறியுள்ளார்.
பாலிவுட் உலகில் ராஞ்சனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். படம் பட்டையை கிளப்புறது. சோனம் கபூர் உடனான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும், ரொமான்ஸ் சூப்பர் என்றும் பரவலான பேச்சு உள்ளது.
ராஞ்சனா மட்டுமல்லாது, தனுஷ் மனைவி இயக்கிய 3 படத்திலும் நாயகி ஸ்ருதியுடன் அதிகம் நெருக்கம் காட்டி நடித்திருந்தார் தனுஷ். சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது பற்றியும், வீட்டில் சொந்த வாழ்க்கையில் நடந்து கொள்வது பற்றியும் மும்பை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் தனுஷ்.
அப்போது, வீட்டில் தன்னால் ஒரு நல்ல கணவனாக நடந்து கொள்ள முடிவதில்லை என்று கூறியிருந்தார். என்னுடைய குழந்தைகளுக்கு நான் ஒரு நல்ல அப்பாவாக நடந்து கொள்கிறேன். ஆனால் என் மனைவி ஐஸ்வர்யாதான் பாவம் எப்படியோ என்னை பொறுத்துக் கொள்கிறார் என்று கூறியுள்ளார். அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. என்ன செய்வது என்னுடைய வேலை அப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் நன்றாக நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்த தனுஷ் பாவம் சொந்த வாழ்க்கையில் ரொமான்ஸ் செய்ய நேரம் இல்லாமல் தவிப்பதைத்தான் இப்படி வெளிப்படுத்தியுள்ளார்.
Post a Comment