சென்னையில் நடிகரை கடத்தி சிறை வைத்த கும்பல்: தப்பி வந்து போலீசில் புகார்

|

சென்னை: சென்னையில் புது நடிகர் கடத்தி சிறை வைக்கப்பட்டார். கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அவர் பெயர் தயா சுப்பிரமணியன் (30). அவர் தெரிவித்துள்ள புகார் மனுவில், "நான் இயக்குநர் ஆகும் ஆசையில் 4 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக சினிமா படம் எடுப்பது தொடர்பாக பேசவேண்டும் என்று என்னை ஒருவர் என்னை அழைத்துச் சென்றார்.

வளசரவாக்கத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த 7 பேர் திடீரென்று என்னை தாக்கினார்கள். உருட்டு கட்டையால் அடித்தார்கள். காலையில் இருந்து மாலை வரை அறை ஒன்றில் அடைத்து வைத்தார்கள். எனக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். வெற்று தாளில் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் நேற்று இரவு 7 மணி அளவில் அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

எதற்காக அவரைக் கடத்தினார்கள், பணத்தகராறா, பெண் விவகாரமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் போலீசார்.

 

Post a Comment