நடிகரோ நடிகையோ சொந்தப் படம் தயாரிக்க முடிவெடுத்து களத்தில் இறங்கி கையைச் சுட்டுக் கொள்வது வாடிக்கையாக நாம் பார்ப்பதுதான்.
அந்த வகையில் நடிப்பில் முன்னணியில் இருந்தபோதே தயாரிப்புக் களத்தில் இறங்கிய ஒரு நடிகை, கையை மட்டுமல்ல, கடன்காரரிடம் சிக்கி தொடையையும் சுட்டுக் கொள்ளும் அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தார்.
வீடுவாசலைக் கூட இழக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக செக் மோசடி வழக்கு சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போனது. இப்போதும் கூட ஒன்றிரண்டு வழக்குகள் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறார்கள்.
சினிமாவிலிருந்து காணாமலே போய்விட்ட இந்த நடிகை, திடீரென ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து குழந்தை கூட பெற்றுக் கொண்டார்.
இப்போது மீண்டும் சினிமா படம் எடுக்க வருகிறார். முதலீடு... 'அன்பூஸ், போத்ராஸு'க்கெல்லாம் அவசியமில்லையாம். வெளிநாட்டில் வெயிட்டாக சம்பாதித்து வைத்திருக்கும் கணவரின் பணம்தான் தயாரிப்பு முதலீடாம்.
'நல்ல கதை இருந்தா... ரூம் போட்டு வைய்ங்க... நானே சென்னைக்கு வந்து கேட்டு, அப்பவே முடிவு செய்யறேன்', என்கிறாராம்!
Post a Comment