விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

|

சென்னை: நடிகர் கமல்ஹாஸன் நடிக்கும் விஸ்வரூபம் 2-ம் பாகத்தின் போஸ்டர்கள், டிசைன்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்த படம் விஸ்வரூபம். பெரும் சர்ச்சைகளுக்கிடையே வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்துக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் கமல்.

விஸ்வரூபம் 2 - முதல் போஸ்டர்கள் & டிசைன்களை வெளியிட்டார் கமல்!

முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக் காட்டியிருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க இந்தியாவிலேயே நடக்கிறது.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல்ஹாஸன். உடனுக்குடன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்து வருகிறார். இதுவரை படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த கமல், முதல் முறையாக படத்தின் தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை வெளியிட்டுள்ளார்.

'இந்த இரண்டாம் பாகத்தை கமல் தயாரிக்கவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும்', என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலின் ராஜ்கமல் நிறுவனம் அளிக்கும் விஸ்வரூபம் 2 என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்பாகத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

 

Post a Comment