ஆந்திராவின் பெரும் பணக்காரரை வளைத்த காஜலின் காதல்!!

|

ஹைதராபாத்: நடிகை காஜல் அகர்வாலுக்கும் ஆந்திராவின் பெரும் பணக்காரத் தொழிலதிபர் ஒருவருக்கும் தீவிர காதல் என்றும், இதனால் படங்களில் நடிப்பதைக் கூட காஜல் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம்தான் இப்போது ஆந்திராவில் மிகவும் பரபரப்புச் செய்தியாக உலா வந்து கொண்டிருக்கிறது.

ஆந்திராவின் பெரும் பணக்காரரை வளைத்த காஜலின் காதல்!!

தெலுங்கில் இப்போது முதல் நிலை நடிகையாக உள்ளார் காஜல். தமிழில் ராசியில்லாத நடிகை என்று சொல்லப்பட்ட அவர், நான் மகான் அல்ல, துப்பாக்கி படங்களுக்குப் பிறகு முன்னணி ஹீரோக்களுக்கு பிடித்த நாயகி ஆகிவிட்டார்.

கமல்ஹாஸன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அவர் கால்ஷீட் கேட்டு வருகிறார்கள். ஆனால் காஜலோ இப்போது எந்தப் படமும் வேண்டாம் என்கிறாராம்.

தெலுங்கில் பவன் கல்யாண் படத்தைக் கூட நிராகரித்துவிட்டாராம்.

தற்போது தமிழில் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா, விஜய்யுடன் ஜில்லா படங்களுடன் நடிப்புக்கு முழுக்குப் போடும் முடிவில் உள்ளாராம் காஜல்.

இதற்குக் காரணம், ஆந்திராவின் பெரும் பணக்காரரான ஒரு தயாரிப்பாளர் காஜலின் காதலில் சிக்கிக் கிடப்பதுதானாம். நடித்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லாத அளவுக்கு, வசதி வாய்ப்புகள் என்பதால், தயாரிப்பாளருடன் செட்டிலாக முடிவு செய்துள்ளாராம் காஜல்.

 

Post a Comment