மும்பை: இன்று நடிகர் சஞ்சய் தத்தின் 54 வது பிறந்த நாள்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத். இன்று அவரது 54 வது பிறந்த நாள். சிறையில் இருக்கும் அவரை சில திரையுலக நண்பர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பதாக செய்திகள் பரவியது.
ஆனால், இதுவரை அதுபோன்று யாரும் அதிகாரப்பூர்வமாக சஞ்சய் தத்தை சந்திக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யவில்லை என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஞ்சய் தத்தின் மனைவி மானயதா தத் மட்டும் நேர்ல் வந்து வாழ்த்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே, சஞ்சய் தத்தின் இந்தப் பிறந்த நாள் சிறையில் அமைதியாக கழியும் எனத் தெரிகிறது.
Post a Comment