மும்பையில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் விபச்சாரம் செய்த 5 டிவி, திரைப்பட நடிகைகள் கைது

|

மும்பை: மும்பை லோகந்த்வாலாவில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் இருந்து 5 விபச்சார அழகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 5 பேரும் இந்தி சீரியல் மற்றும் போஜ்பூரி பட நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை லோகந்த்வாலா பகுதியில் உள்ள மீரா டவர்ஸில் பிளாட் பி எண் 1402ல் விபச்சாரம் நடப்பதாக அறிந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 5 நடிகைகள் மற்றும் அவர்களின் தரகர் இம்தியாஸ் கான் ஆகியோர் சிக்கினர். அதில் சிலர் இந்தி டிவி சீரியல்களிலும், மீதமுள்ளவர்கள் போஜ்புரி மற்றும் சி கிரேட் படங்களிலும் நடித்துள்ளனர்.

அவர்கள் விபச்சாரம் நடத்திய வீடு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. அவரிடம் வீட்டை வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

அந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் வாடிக்கையாளர் போன்று நடித்து இம்தியாஸை அணுகினோம். முதலில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு நடிகைக்கு ரூ.1 லட்சம் கேட்ட இம்தியாஸ் பிறகு ரூ.25,000க்கு நடிகையை அனுப்ப ஒப்புக் கொண்டார். இதையடுத்து நாங்கள் அந்த வீட்டுக்கு சென்ற உடன் வாடிக்கையாளர் என்று நினைத்து நடிகை ஒருவர் வெளியே வந்தார். அப்போது நாங்கள் வீட்டை சோதனை செய்து அவர்களை கைது செய்தோம் என்றனர்.

 

Post a Comment