மும்பை: ஆபாச பட நடிகையை நாம் வரவேற்போம் ஆனால் சொந்த மண்ணைச் சேர்ந்த பெண்ணை எதிர்ப்போம் என்று இந்தி நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
பூனம் பாண்டே நடிப்பில் வெளிவந்துள்ள முதல் இந்தி படம் நஷா. அந்த படத்தின் போஸ்டர்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அதற்கு மும்பை மற்றும் டெல்லியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு இடங்களிலும் நஷா போஸ்டர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நஷா போஸ்டர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது தான் பூனமை பாதித்துள்ளதாம்.
இந்நிலையில் இது குறித்து பூனம் கூறுகையில்,
இது என்னை நோகடிப்பதாகும். என் முதல் படத்திலேயே என்னை இப்படி எதிர்ப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. என்னை திரையுலகில் வரவேற்க யாரும் இல்லை. திரையுலகில் எனக்கு என்று எந்த காட்ஃபாதரும் இல்லை. ஆனால் அதற்காக இந்த முறையில் வரவேற்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் அப்படி என்ன பெரிய குற்றத்தை செய்துவிட்டேன்.
நான் லிமிட்டை தாண்டவில்லை. என் பட போஸ்டர்களை விட மோசமானவற்றை எல்லாம் நான் பார்த்துள்ளேன். என் போஸ்டர்களில் அப்படி ஒன்றும் இல்லை. என் அந்தரங்க உறுப்புகளை நான் காட்டவில்லை. வெளிநாட்டில் இருந்து வரும் ஆபாச பட நடிகைக்கு நம் நாட்டு மக்கள் மரியாதை அளிப்பார்கள். ஆனால் நான் ஆபாசம் என்று கூறும் வகையில் எதுவும் செய்யவில்லை. நஷா ஒன்றும் ஆபாச படம் இல்லை.
நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், ஒரு பாரம்பரியமான பிராமண குடும்பத்தில் இருந்து வந்தவள். என் செயல்கள் எனது குடும்பத்தாருக்கு அதிர்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார்.
Post a Comment