பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

|

பிறந்த நாளன்று பேஸ்புக்கில் இணைந்த தனுஷ்!

தனது பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி பேஸ் புக்கில் இணைந்தார் தனுஷ்.

தனுஷ் தனது 30வது பிறந்த நாளை நேற்று லண்டனில் நண்பர்கள் புடை சூழ கொண்டாடினார்.

இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோர் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த நாளில் தனது பேஸ்புக் பக்கத்தை தொடங்கிய தனுஷ், அதில் தனது படங்கள், அவை குறித்த செய்திகளை பதிவு செய்தார்.

ஏற்கெனவே ட்விட்டரில் தனுஷ் ரொம்பப் பிரபலம். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைத் தொடர்கின்றனர்.

பேஸ்புக்கில் இணைந்தது குறித்து தனுஷ் கூறுகையில், "நாம் சொல்ல நினைக்கும் விஷயங்களை நேரடியாக ரசிகர்களுக்குச் சொல்ல சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த வழயாக மாறியுள்ளது,' என்றார்.

இப்போதைக்கு தமிழில் நய்யாண்டி படத்தில் மட்டுமே நடித்து வருவதாகவும், விரைவில் புதிய இந்திப் படத்தை அறிவிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தனுஷின் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/dhanushchannel

 

Post a Comment