இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் - பிசி ஸ்ரீராம்

|

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் -  பிசி ஸ்ரீராம்

இலக்கணங்களை மீறிய ஹீரோ விக்ரம் என்று பாராட்டியுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிசி ஸ்ரீராம்.

விக்ரமின் ஆரம்ப நாட்களில் அவரை வைத்து மீரா என்ற படத்தை இயக்கியவர் பிசி ஸ்ரீராம். பாடல்கள், ஒளிப்பதிவுக்காக பெரிய அளவில் பேசப்பட்ட படம்.

இப்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார் பிசி ஸ்ரீராம்.

விக்ரம் பற்றி பிசி ஸ்ரீராம் கூறுகையில், "நடிகனாக மட்டுமல்ல...மனிதனாகவும் விக்ரம் ரொம்ப ஜென்டில்மேன். ஆச்சர்யப்படக்கூடிய ஒரு உழைப்பாளி. ஒரு ஹீரோவுக்கு நீங்க என்னலாம் சினிமா இலக்கணம் வெச்சிருந்தாலும் அது இல்லாத ஹீரோ அவர். தன்னை நடிகனாக மட்டுமே முன்நிறுத்திக்கொள்கிற ஒருத்தர்.

'நமக்கு இவ்வளவுதான் வரும்'னு பெரும்பாலும் பயப்படுவாங்க. ஆனா, விக்ரம் 'தனக்கு இதெல்லாம் வருமா'னு சோதனை பன்றதையே வேலையா செய்றவர்.

மீரா படத்தில் ஹீரோவாக நடிச்ச விக்ரம் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் 'குருதிப் புனல்' படத்துல டப்பிங்லாம் பேசினார். என்ன செஞ்சுட்டு இருந்தாலும், அதை சினிமால செய்யணும்கிறதுதான் அவரோட ஐடியா. என்னைப் பொருத்தவரை திறைமையோடு கூடிய முயற்சிங்கிற விஞ்ஞானம் தப்பே பண்ணாது. அதுக்கு சரியான உதாரணம் விக்ரம்தான்," என்றார்.

 

Post a Comment