மும்பை: மூளையில் செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து, முழுவதுமாக குணமடைந்துவிட்டேன், என ஹ்ரித்திக் ரோஷன் கூறினார்.
இந்தி படத்தில் சண்டைக் காட்சி யொன்றில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்தபோது தவறி விழுந்தார். தலையில் அடிபட்டு மூளையில் ரத்தம் உறைந்தது.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹ்ரித்திக் ரோஷன் அனுமதிக்கப்பட்டு மூளையில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. சில நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையிலிருந்து தனது தந்தையுடன் நேற்று வெளியில் வந்த ஹ்ரித்திக், வெளியில் கூடி இருந்த ரசிகர்களை பார்த்து மகிழ்ச்சியோடு இரு கைகளையும் உயர்த்தினார். நடனமும் ஆடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "நான் பூரணமாக குண மடைந்து விட்டேன்'' என்றார்.
விரைவில் நடிக்க ஆரம்பித்துவிடுவேன் என்றும், இனி எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment