நான்கு நாட்களில் ரூ 100 கோடி... சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை!

|

மும்பை/சென்னை: ரம்ஜான் ஸ்பெஷலாக திரைக்கு வந்த நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது 'சென்னை எக்ஸ்பிரஸ்' திரைப்படம்.

ஷாருக் கான், தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் 'சென்னை எக்ஸ்பிரஸ்.' கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸானது. தமிழகம் உள்பட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை ரம்ஜான் ஸ்பெஷலாக வந்தது.

நான்கு நாட்களில் ரூ 100 கோடி... சென்னை எக்ஸ்பிரஸ் புதிய சாதனை!  

விஜய் - அமலா பால் நடிப்பில் உருவான 'தலைவா', சில பிரச்னைகளால் தமிழகத்தில் மட்டும் ரிலீஸாகவில்லை. அதேபோல, பவன் கல்யாண் நடிப்பில் உருவான தெலுங்குப் படம் தெலுங்கானா பிரச்னையால் ரிலீஸாகவில்லை.

இந்த இரண்டு பெரிய படங்களுமே ரிலீஸாகாத நிலையில், அந்தப் படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளில் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வெளியாகியுள்ளது.

சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடிக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் சின்னச் சின்ன நகரங்களிலும் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது இந்தப் படம்.

முதல் நாளில் 33.12 கோடி வசூல், இரண்டாம் நாளில் 28.05 கோடி, மூன்றாம் நாளில் 32.50 கோடி வசூலித்துள்ளது இந்தப் படம்.

வியாழக்கிழமை திரையிடப்பட்ட சிறப்புக் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 6.75 கோடிகளை வசூலித்து, மொத்தம் ரூ 100 கோடிகளைத் தொட்டுவிட்டது சென்னை எக்ஸ்பிரஸ்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரசுக்கு.

இதன் மூலம் இந்திப் பட வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ்.

சென்னை எக்ஸ்பிரஸ்- விமர்சனம்

 

Post a Comment