சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயற்சி

|

சென்னை திரும்பியதும் ஜெயலலிதாவை சந்திக்க விஜய் முயற்சி

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பிய பிறகு அவரை சந்திக்க விஜய் தரப்பில் முயற்சி நடந்து வருகிறதாம்.

விஜய்யின் தலைவா படம் கடந்த 9ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கடந்த 8ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட காரணங்களால் படம் அறிவித்தபடி ரிலீஸாவது கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து விஜய் அவரது தந்தை சந்திரசேகருடன் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி கொடநாட்டுக்கு சென்றார். ஆனால் முதல்வரை சந்திக்க முடியாமல் திரும்பினார்.

இதையடுத்து படம் மறுநாள் அறிவித்தபடி ரிலீஸாகவில்லை. இதற்கிடையே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க முடியாது என கேளிக்கை வரி விலக்கு பரிந்துரை குழு தெரிவித்தது. படம் ரிலீஸாகாத நிலையில் அதன் திருட்டு சிடிக்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்புகிறார்.

அவர் சென்னை வந்தவுடன் அவரை சந்திக்க விஜய் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு முயன்று வருகிறதாம்.

 

Post a Comment