தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

|

இயக்குனர் கவுதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தங்க மீன்கள்.

கற்றது தமிழ் "ராம்" இயக்கி, முதல் முறை ஹீரோவாக நடித்துள்ளார். அவர் தந்தையாக நடிக்க சாதனா என்ற சிறுமி அவரது மகளாக நடிக்கிறார்.

பத்மப்ரியா சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கற்றது தமிழ் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து வெளிவரும் படம் இது.

தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

படத்தின் ட்ரைலர் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியது. அதேநேரம் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளியான ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலோ, கேட்ட அத்தனை பேரையும் நெகிழ வைத்துவிட்டது.

இப்படத்தை ஒரு வாரத்துக்கு முன்பே செய்தியாளர்களுக்குப் போட்டுக் காட்டி விட்டார் ராம்.

அந்தக் காட்சியின்போது செய்தியாளர்களுக்கு அவர் வைத்த வேண்டுகோள் இது..

வணக்கம், நான் ராம்.

தங்க மீன்கள் என்ற எளிமையான படத்தை பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்யவிருக்கும் உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் மிக்க நன்றி..

உங்களுடைய விமர்சனங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். உங்கள் பார்வைகளே என் குறைகளை குறைப்பதற்கான வழி.

தங்க மீன்கள்... குறைகள் இருந்தா 30-ம் தேதிக்குப் பிறகு சொல்லுங்க- ராம் வேண்டுகோள்!

விமர்சனங்களை ஆகஸ்ட் 30 வெள்ளி முதல் வெளியிடும் படி கேட்கிறேன், வியாபார காரணத்திற்காக.

நிறைகளை இன்றே சொல்லுங்கள் குறைகளை ஆகஸ்ட் 30க்கு மேல் சொல்லுங்கள்

காத்திருக்கிறேன்,
ராம்

என்று தன்னுடைய நல்ல சினிமா முயற்ச்சியை ஊக்குவிக்க ஆதரவு கேட்டுக்கொண்டார்... வாழ்த்துக்கள் ராம், நல்ல படங்களை ஊக்குவிக்க நாங்கள் தயங்கியதே இல்லை.

 

Post a Comment