சென்னை : தலைவா படம், ‘டைம் டு லீட்' என்ற டேக் லைனைத் துறந்து ரிலீசானதைத் தொடர்ந்து, தற்போது விஷாலும் தனது மத கஜ ராஜா படத்தில் பயன்படுத்தப் பட்ட எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையை வாபஸ் வாங்கினார்.
வீண் சிக்கல்களில் சிக்காமல் இருப்பதற்காக, இது போன்ற டேக்லைன் எனச் சொல்லப்படுகின்ற படத்தலைப்பின் கீழ்ப் போடப்படும் ஒன்று அல்லது சில வார்த்தைகளின் தொகுப்புகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது பற்றி யோசித்து வருகிறார்கள் நாயகர்கள்.
இந்நிலையில், இது போன்ற டேக்லைன்களை பயன் படுத்தினால் தானே பிரச்சினை என, விரைவில் ரிலீசாக இருக்கிற ரெண்டாவது படத்தின் டேக்லைனாக ‘நோ டேக்லைன்.. நோ ப்ராப்ளம்' என வித்தியாசமாகப் போட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள் படக்குழுவினர்.
முதல் படமான தமிழ்ப்படத்தில் இதுவரை வெளியான தமிழ் சினிமாக்களில் உள்ள லாஜிக் இல்லா மேஜிக்களை கிண்டலடித்திருந்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் தற்போது தனது அடுத்த படமான ‘ரெண்டாவது படத்தில்' டேக்லைனிலேயே தனது வேலையைக் காட்டியிருப்பது படம் பற்றிய ஆவலை ரசிகர்களிடம் அதிகப் படுத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
வித்தியாசமாக அதே சமயம் சர்ச்சைக்குள் சிக்காமல் ‘இப்ப என்ன பண்ணுவ...இப்ப என்ன பண்ணுவ...' என்ற ரேஞ்சில் இருக்கிறது இந்த விளம்பரங்கள்.
Post a Comment