நீதானே என் பொன்வசந்தத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையில் வெளிவந்துள்ள மேகா படத்தின் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேகா படத்தின் இசை சில தினங்களுக்கு முன் லண்டனில் கமல்ஹாஸனால் வெளியிடப்பட்டது.
இந்தப் படத்தின் சிடிக்காக பல ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இளையராஜா கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றனர்.
இந்தப் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முகிலோ மேகமோ பாடலை யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இதே பாடலை இளையராஜாவும் பாடியுள்ளார். மிகச் சிறப்பான மெட்டு, மனதை வருடும் இசைக் கட்டமைப்பு. நா முத்துக்குமார் எழுதிய பாடல் இது.
செல்லம் கொஞ்சும் (பழனி பாரதி) என்ற பாடலையும் யுவனும் என்எஸ்கே ரம்யாவும் பாடியுள்ளனர். இந்தப் பாடலும் மிக இனிமையாக ஒலிக்கிறது.
கார்த்திக், ப்ரியதர்ஷினி இசையில் ஒலிக்கும் 'என்ன வேண்டும்' (நா முத்துக்குமார்) பாடல், ராஜாவின் இசை ஆளுமையை உணர்த்துகிறது.
இளையராஜா குரலில் வரும் ஜீவனே ஜீவனே.. உயிரை உருக்குகிறது.
எண்பதுகளில் வெளியாகி இன்றுவரை கேட்கும்போதெல்லாம் மனதை வருடும் புத்தம் புதுக் காலை பாடலை இந்த ஆல்பத்தில் சேர்த்துள்ளனர். பழைய பாடலை ஜானகி பாடியிருந்தார். இந்தப் புதிய வர்ஷனை அனிதா பாடியுள்ளார். கங்கை அமரன் எழுதிய பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்வனே கள்வனே என்ற பாடல் ஹரிச்சரண், என்எஸ்கே ரம்யா குரல்களில் மனதை மயக்குகிறது (நா முத்துக்குமார்).
முகிலோ மேகமோ பாடல் இளையராஜாவின் குரலிலும் ஒரு முறை ஒலிக்கிறது. சான்சே இல்லை. யுவன் குரலில் கேட்டதைவிட, ராஜா குரலில் தனி பரவசத்தை உணர முடிந்தது.
இப்போது ரசிகர்கள் கவலையெல்லாம் இந்தப் பாடலை படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமே என்பதுதான்.
Post a Comment