உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க நன்றாக படியுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

|

உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க நன்றாக படியுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்

சென்னை: உலக அளவில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறார். இது தவிர ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறார். பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் மாநிலத்தில் முதல் 3 இடங்களை பிடித்த ஏழை மாணவ-மாணவியருக்கு ரூ.15 லட்சம் உதவித் தொகை, நோட்டு புத்தகங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியருக்கு கேடயம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் வழங்கி தன் கையாலேயே அவர்களுக்கு உணவு பரிமாறினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் விஜய் உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில்,

மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். நாம் நமக்காக, நமது குடும்பத்திற்காக, நம் நாட்டிற்காக நன்றாக படித்து நல்ல பிள்ளைகள் என்று பெயர் வாங்க வேண்டும். தரமான கல்வியால் மட்டுமே உலக அளவில் இந்தியாவை தலைநிமிர்ந்து நிற்க வைக்க முடியும். அதனால் அத்தகைய கல்வியை பயின்று நாட்டின் தரத்தை உயர்த்துங்கள் என்றார்.

 

Post a Comment