சில பல கத்தரிகளுக்குப் பிறகு விஜய்யின் 'தலைவா'வுக்கு 'யு'

|

சென்னை: விஜய்யின் தலைவா படத்திற்கு சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

சில பல  கத்தரிகளுக்குப் பிறகு  விஜய்யின் 'தலைவா'வுக்கு 'யு'  

விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு பெறுவது கஷ்டமாகிவிடும். இதையடுத்து தலைவா படம் ரிவைசிங் கமிட்டிக்கு போட்டுக் காட்டப்பட்டது.

சில பல  கத்தரிகளுக்குப் பிறகு  விஜய்யின் 'தலைவா'வுக்கு 'யு'

படத்தை பார்த்த கமிட்டி சில இடங்களை கட் பண்ணுமாறு கூறிவிட்டு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து படம் அறிவித்தபடி வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

விஜய்யின் தலைவா படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment