ரஜினி ஆசீர்வாதத்துடன் லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக்கான்

|

ரஜினி ஆசீர்வாதத்துடன் லுங்கி டான்ஸ் ஆடிய ஷாருக்கான்

சென்னை: ஷாருக்கான் தனது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் லுங்கி டான்ஸ் பாடலை எடுக்கும் முன்பு ரஜினிகாந்திடம் அனுமதியும், ஆசீர்வாதமும் வாங்கினாராம்.

ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோரை வைத்து பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். ரம்ஜான் பண்டிகை தினத்தன்று படம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் லுங்கி டான்ஸ் என்ற ஒரு பாடலுக்கு தீபிகாவுடன் ஆடியுள்ளார். இந்த பாடலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டெடிகேட் செய்துள்ளார்.

இந்த பாடலை படமாக்கும் முன்பு ஷாருக்கான் ரஜினிகாந்திடம் அனுமதி பெற்றாராம். மேலும் ரஜினி அந்த பாடலுக்கு தனது ஆசியை வழங்கினாராம். முன்னதாக ஷாருக்கான் நடித்த கொடூர மொக்கைப் படமான ரா ஒன்னில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் வந்தார். தற்போது சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலில் ரஜினியின் புகைப்படங்கள் பேக்கிரவுண்டில் வருகிறது. மேலும் அந்த பாடலில் அவ்வப்போது தலைவா என்று திரையில் வருகிறது.

ஷாருக் என்ன விஷயம் அண்மை காலமாக உங்களுக்கு ரஜினிகாந்த் மீது பாச மழை பொழிகிறீர்களே?

 

Post a Comment