ஷம்முவுடன் திருமணமா? - அறிக்கை மூலம் பரத் விளக்கம்

|

நடிகை ஷம்முவை நான் திருமணம் செய்யவில்லை. இப்போதைக்கு கவனம் முழுவதும் நடிப்பில்தான் என்று நடிகர் பரத் கூறியுள்ளார்.

நடிகை பரத் - ஷம்மு காதலிப்பதாகவும், பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் கோடம்பாக்கத்தில் கடந்த சில தினங்களாக பேசப்பட்டு வந்தது. அதை உறுதி செய்வது போல, மனதுக்குப்பிடித்தவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாக பரத் கூறியிருந்தார்.

ஷம்முவுடன் திருமணமா? - அறிக்கை மூலம் பரத் விளக்கம்

இதனால் கடந்த இரு தினங்களாக அவரது திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன.

இப்போது அதனை மறுத்து பரத் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், "நான் ஒரு நடிகையைக் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எனக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. இப்போதுதான் 555 படத்தை முடித்திருக்கிறேன். தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறேன்.

எனக்கு வீட்டில் பெண் பார்ப்பது நிஜம்தான். ஆனால் அதுகுறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை," என்று அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment