டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்தாக கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க திட்டமிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளைப் போன்று கால்பந்து பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஐஎம்ஜி-ரிலையன்ஸின் ஆதரவில் இந்த போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்த போட்டிகளில் ஐபிஎல் போன்றே பல்வேறு அணிகள் விளையாடுகின்றன.
அதில் கொல்கத்தாவுக்காக விளையாடும் அணியை வாங்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் முதலில் டெம்போ அணியை வாங்க திட்டமிட்டேன். ஆனால் தற்போது புதிய லீக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அதனால் அதில் விளையாடும் கொல்கத்தா கால்பந்து கிளப்பை வாங்க விரும்புகிறேன் என்றார்.
அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடக்கும் கால்பந்து பிரீமியர் லீக்கில் 8 கிளப்புகள் மோதவிருக்கின்றன. 10 வாரங்கள் நடக்கும் இந்த போட்டிகளில் 176 வீரர்கள், 72 பிரபல சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். வரும் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கும்.
Post a Comment