சென்னை: தன் பெயரில் போலியாக ஒரு பக்கத்தை யாரோ ட்விட்டரில் தொடங்கி, தொடர்ந்து பதிவிட்டு வருவதாக நடிகர் ஆர்யா புகார் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் இணையத்தில் நடிகர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி, அதில் அவர்களின் படங்கள் மற்றும் பர்சனல் விஷயங்களைப் பகிர்வது தொடர்ந்து நடக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் அவரே அப்டேட் செய்வது போது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பக்கங்கள் உள்ள நிலையில், மற்ற நடிகர்கள் எம்மாத்திரம்?
டிவிட்டரில் (https://twitter.com/aryaactor) என்ற பெயரில் ஆர்யா இயங்கி வருவதாகக் கூறப்பட்டது.
அதை நம்ப வைக்கும் வகையில், அஜித்துடன் ஆர்யா நடித்து வரும் 'ஆரம்பம்' படத்தின் இசை வெளியீட்டு எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியானது.
அந்த இணையத்தில், "அனைவருமே 'ஆரம்பம்' இசை வெளியீடு எப்போது என்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள். தற்போது வரை யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறோம். ஏதாவது மாற்றம் இருந்தால் கூறுகிறேன்" என்ற தகவல் வெளியானது.
படத்தின் தலைப்பையே வேண்டுமென்றே ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்து பப்ளிசிட்டி கிரியேட் பண்ண ஆரம்பம் குழுவினருக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது.
உடனே ஆர்யா, "நான் டிவிட்டர் இணையத்திலேயே இல்லை. எனது பெயரில் இயங்கி வருவது போலியானது. 'ஆரம்பம்' இசை வெளியீடு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.
என்னமோ போங்கப்பா..!
Post a Comment