பார்வையில்லாத ரசிகையின் 8 ஆண்டு கால கனவை நனவாக்கிய ஷாருக்கான்

|

லண்டன்: பார்வையில்லாத ரசிகையின் கனவை பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நனவாக்கியுள்ளார்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கரோலின் ஜெடர். அவருக்கு கடந்த 2005ம் ஆண்டு கண் பார்வை பறிபோனது. இங்கிலாந்தில் வசிக்கும் அவருக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் என்றால் மிகவும் பிடிக்கும். அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது தான் அவரது கனவு.

இந்நிலையில் திருமணம் ஒன்றுக்காக இங்கிலாந்துக்கு சென்ற ஷாருக்கானுக்கு இது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஷாருக்கான் கரோலினை சந்தித்தார்.

பார்வையில்லாத ரசிகையின் 8 ஆண்டு கால கனவை நனவாக்கிய ஷாருக்கான்

இது குறித்து கரோலின் கூறுகையில்,

திடீர் என்று ஒரு நாள் ஷாருக் என் அருகே வந்து ஹலோ கரோலின் என்று கூறி என் தோளில் தட்டிக் கொடுத்தார். பின்னர் என்னை கட்டிப் பிடித்தார். நான் எப்படி இருக்கிறேன், லண்டன் பிடித்திருக்கிறதா என்று கேட்டார். துபாய்க்கு போக வேண்டி இருப்பதால் சீக்கிரம் கிளம்ப வேண்டும், அதற்காக மன்னித்துக் கொள் என்றார். நான் அவரின் முகத்தை தொட்டுப் பார்க்க 8 ஆண்டுகளாக காத்திருந்தேன்.

தற்போது அவரின் முகத்தை தொடாமல் எப்படி அனுப்புவது. கிளம்பும் முன்பு அவர் மீண்டும் என்னை கட்டிப்பிடித்தார். அப்போது அவரது முகத்தை தொட்டுப் பார்த்தேன். இந்த தருணத்தை நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன். நன்றி ஷாருக்கான் என்றார்.

 

Post a Comment