சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா இயக்கும் புதிய படமான மாலினி 22 பாளையங்கோட்டை படப்பிடிப்பு இறுதிக்கட்டதைதை அடைந்துள்ளது.
தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்தை படத்தை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார். மலையாளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தைத்தான் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக நித்யா மேனன், புதுமுக நாயகனாக கிரிஷ் நடிக்கின்றனர். கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடந்த இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படம் எப்படியும் போட்ட முதலுக்கு மேல் தேற்றிவிடும் என்ற நம்பிக்கை ஏராளமாக வந்துவிட்டதாம் ஸ்ரீப்ரியாவுக்கு. எனவே மேலும் இரு மலையாளப் படங்களின் உரிமையை வாங்கி வைத்துள்ளாராம் தொடர்ந்து இயக்க.
ஏற்கெனவே டிவி தொடர்கள், படங்களை இயக்கிய அனுபவசாலிதான் ஸ்ரீப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment