ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

|

மும்பை: சமையல் அறை சாதனங்கள் விளம்பரத்தில் ஜோடியாக நடிக்க நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து அண்மையில் பிரபல நிறுவனத்தின் சமையல் அறை சாதன விளம்பரங்களில் நடித்தார். அந்த விளம்பரத்தில் நடிக்க அவர்கள் ரூ.30 கோடி சம்பளம் கேட்டுள்ளனர். அந்த நிறுவனமும் சற்றும் யோசிக்காமல் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துவிட்டதாம்.

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

கணவனும், மனைவியும் தனித்தனியாக விளம்பரங்களில் நடிக்கவே பெரும் தொகையை கேட்பார்கள். அப்படி இருக்கையில் ஜோடியாக நடிக்க இவ்வளவு கேட்டதில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அபி, ஐஸ் தவிர சைஃப்-கரீனா, அக்ஷய் குமார்-ட்விங்கிள் கன்னா ஆகிய ஜோடிகளும் விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

 

Post a Comment