மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோல் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்களை திருடிய பணியாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
'பாசிகர்' இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.
'தில்வாலே துலன்யே லே ஜாயங்கே' மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' படங்களின் பிரபலமடைந்தார். 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சார கனவு' படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.
அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment