நடிகை ராதா செக்ஸ் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு!

|

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளாமலேயே செக்ஸ் வாழ்க்கையை அனுபவித்தார் என நடிகை ராதா கொடுத்துள்ள புகாரில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளார் தயாரிப்பாளர் ஜி பைசூல்.

சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல சினிமா படங்களில் கதாநாயாகியாக நடித்துள்ளவர் நடிகை ராதா. இவர், கடந்த 22-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ‘திருவல்லிக்கேணியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜி.பைசூல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்ததாகவும், அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும், தன்னிடம் இருந்து ரூ.50 லட்சம் மோசடி செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

நடிகை ராதா செக்ஸ் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தயாரிப்பாளர் மனு!

இந்த புகார் குறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் விசாரணைக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் பைசூல் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘நடிகை ராதா பொய் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மார்கரேட் சக்கரபாணி ஆஜராகி வாதம் செய்தார்.

இதையடுத்து மனு மீதான விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று மனுவுக்கு போலீசார் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

Post a Comment