சென்னை: கேப்டனின் மகன் நடிக்கும் படத்திற்கு அவருக்கு ஜோடியாக நம்ம ஊர் மயிலின் மூத்த மகள் நடிக்கப் போவதாக பேச்சாக கிடக்கிறது.
கேப்டனின் இளைய மகன் அப்பா போன்று ஹீரோவாகிறார். படத்தின் பூஜை கேப்டனின் வீட்டிலேயே நடந்தது. விழாவில் அவரின் காலத்து ஹீரோக்கள் முதல் தற்போதுள்ள இளம் ஹீரோக்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.
படத்தில் 2 ஹீரோயின்களாம். ஆனால் அவர்கள் யார் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நம்ம மயிலின் மூத்த மகளை ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கோலிவுட்டில் பேச்சாக கிடக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் ஆமாம் பேச்சுவார்த்தை நடக்கிறது, ஆனால் இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர். மயிலின் மூத்த மகளுக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment