இன்றைய பாடகர்கள் வியாபாரிங்க.. உணர்ச்சியே இல்லாம பாடறாங்க! - இசையமைப்பாளர் அலி மிர்சா

|

இன்றைய பாடகர்கள் வியாபாரிங்க.. உணர்ச்சியே இல்லாம பாடறாங்க! - இசையமைப்பாளர் அலி மிர்சா

இன்றைய பாடகர்கள் வெறும் வியாபாரிகளாக உள்ளனர். யாரும் உணர்ச்சியுடன் பாடுவதில்லை, என்று குற்றம்சாட்டியுள்ளார் இசையமைப்பாளர் அலி மிர்சா.

சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் டிரைலரும் பாடல்களும் திரையிடப்பட்டன.

வளரும் கலைஞர்களை ஊக்கு விக்கும் விதமாக அரபிக்குதிரை, கஜல் மழை ஆகிய பாடல்களுக்கு ஜான் & பீட்டர் குழுவினர் மேடையில் நடனமாடினர். பாடகி பத்மலதா அன்பும் அறிவும் என்கிற பாடலை மேடையில் பாடினார். பாடல்களை படத்தின் கஸாலி, சாரதி ஆகியோர் எழுத இசையமைத்திருக்கிறார் அலி மிர்சா.

குற்றச்சாட்டு

அவர் பேசும்போது, "பழைய பாடல்களைப் போல இல்லையே என பலரும் கேட்கிறார்கள். பாடல் வரிகளில் உணர்ச்சிகள் இல்லாமல் போனதற்கு, இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து திரும்ப திரும்ப பாடகர்கள் ஒத்திகை பார்த்த பழக்கம் மறைந்துவிட்டதே காரணம்.

இன்றைய பாடகர்களிடம் வணிக எண்ணமே மேலோங்கியிருக்கிறது. ஒத்திகையெல்லாம் பார்க்காமல், காகிதத்தைப் பார்த்தே பாடி விடுகிறார்கள். பெரிய பாடகர்களோ சிறிய இசையமைப்பாளர்களிடம் மெட்டுக்களை வாங்கியபிறகுதான் பாடவே வருகிறார்கள்.

இதில் வேறு வார்த்தைகள் சரியாகக் கேட்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள்... இப்படி எல்லாவற்றையும் போராடி ஜெயித்துதான் புதிய இசையமைப்பாளர்களால் படங்களுக்கு இசையமைக்க முடிகிறது," என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் இசையமைப்பாளர் அலி மிர்சா.

 

Post a Comment