இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை! - இயக்குநர் மகேந்திரன்

|

இளையராஜாவின் இசைக்கு நான் அடிமை! - இயக்குநர் மகேந்திரன்

சென்னை: என் படங்களுக்கு தன் இசையால் வசனமெழுதியவர் இளையராஜாதான். அவரது இசைக்கு நான் அடிமை, என்று இயக்குநர் மகேந்திரன் கூறினார்.

சினிமாவும் நானும் என்ற தலைப்பில் மகேந்திரன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் மகேந்திரன் பேசுகையில், "மெளனத்தை விட சிறந்த மொழி இருப்பதாகத் தெரியவில்லை. அர்த்தங்களுக்கு ஏற்ப வார்த்தைகள் கிடைப்பதில்லை. அந்த சமயம் எண்ணங்களை, மெளனங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். 'உதிரிப் பூக்கள்' போன்ற எனது படங்களில் மெளனம் அதிகமாக இருப்பதாகச் சொல்வார்கள்.

உண்மைதான், எனது படத்துக்குப் பெரும்பாலும் வசனம் எழுதியது இளையராஜாதான். மெளனங்களை நான் வசனங்களாக வடித்தபோது, இசையால் ஒவ்வொரு இடத்தையும் நிரப்பியவர் இளையராஜா.

100 ஆண்டுகள் கடந்தும் டூயட் பாடல்கள் இருப்பது தமிழ் சினிமாவின் சுமையாக இருக்கிறது. சினிமாவின் இயல்புத் தன்மையை பாடல்கள் கெடுத்து விடும். அதே சமயம், நான் இளையராஜாவின் பாடல்களுக்கு அடிமை. பல நேரங்களில் மன இறுக்கத்துக்கு மருந்தாக இருந்தவை ராஜாவின் பாடல்களே. திரைக்கதை எழுதும் போதும், மனஉளைச்சலை உணரும்போது அவரது இசையும் பாடல்களுமே மனத்தை அமைதிப்படுத்தும்," என்றார்.

நீங்கள் கேட்க நினைக்கும், அனைத்து கேள்விகளுக்கும் ‘சினிமாவும் நானும்' புத்தகத்தில் பதில்கள் கூறியுள்ளேன்," என்றார்.

 

Post a Comment