ஃபெடா அமைப்பின் விளம்பரப் படத்தில் விலங்குகளின் புதிய தேவதையாக நடித்துள்ளார் எமி ஜாக்ஸன்.
2009-ல் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் பெற்றவர் எமி ஜாக்ஸன். தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்‘ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் பதிப்பிலும் இவர்தான் நாயகி. தற்போது ஷங்கரின் ‘ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பூனை மற்றும் நாய் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் மீது அன்பு செலுத்தி வருகிறார்.
தற்போது அவர் விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை வழங்கும் ‘ஃபெடா' அமைப்பில் இணைந்துள்ளார்.
ஒவ்வொரு வீட்டிலும் விலங்குகளை வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த அமைப்பு ஒரு விளம்பரப் படத்தை எடுத்துள்ளது.
இந்த விளம்பரப்படத்தில் விலங்குகளை காப்பாற்றும் தேவ தூதராக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்கி லியோன்ஸ் இந்த விளம்பர படத்தை இயக்கியுள்ளார்.
Post a Comment