சென்னை: பிரபல தமிழ்ப் படத் தயாரிப்பாளர் பி நந்தகோபால் நாயுடு இன்று சென்னையில் காலமானார்.
ஆடிப் பெருக்கு, குமரிப் பெண்ணின் உள்ளத்திலே, புருஷ லட்சணம், புதுமாப்பிள்ளை, பத்தினி போன்ற படங்களைத் தயாரித்தவர் நந்தகோபால் நாயுடு. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு படங்களை வாங்கி விற்பதிலும் இவர் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 91 வயதான மதனகோபால் நாயுடு, சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
இன்று காலை உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக அவர் உயிர் பிரிந்தது.
மதனகோபால் நாயுடுவுக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
மேற்கு தாம்பரம் முத்துலிங்க செட்டி தெருவில் உள்ள வீட்டில் திரையுலகினர் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மாலையில் தாம்பரம் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
தொடர்புக்கு: மகேந்திரன், சுரேந்திரன் (மகன்கள்) - 9600014023, 9003494973.
Post a Comment