சின்ன பட்ஜெட்டில் படமெடுக்க வேண்டும் என பலரும் ஆலோசனை சொல்கிறார்கள். அத்தகைய படங்களுக்கு ஆதரவு நிச்சயம் என தயாரிப்பாளர் சங்கம் சத்தியமடிக்கிறது.
ஆனால் அப்படி எடுக்கிற படங்கள் பெருமளவு பெட்டிக்குள்ளேயே முடங்கி விடுகின்றன. இருந்தும் சிலர் துணிச்சலாக எடுத்து வெளியிடவும் செய்கிறார்கள். அப்படி வெளியாகத் தயாராக உள்ள படம்தான் கார்த்திகேயன்.
சுப்பிரமணியபுரம் சுவாதியும், புதுமுகம் நிகிலும் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தை மேக்னம் சினி பிரைம், நவ்யா விஷுவல் மீடியா நிறுவனங்கள் சார்பில் ஸ்ரீனிவாஸ், மல்லிகார்ஜூன் தயாரிக்கிறார்கள்.
ஜெய்பிரகாஷ், கிஷோர், துளசி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சாகசமும், ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறிப்பிடும் வகையில் விறுவிறு த்ரில்லராக கார்த்திகேயன் படம் உருவாகிறது.
சந்தூ என்ற புதிய இயக்குநர் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஜி. கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது கார்த்திக்கேயன்.
Post a Comment